Image Image

About Us

தெலுங்கை தாய் மொழியாகக் கொண்டு ஆந்திராவிலிருந்து தமிழகம் வந்து தமிழரோடு தமிழராய் ஒன்றி வாழ்பவர்கள் ரெட்டியார் சமூக மக்கள்.

தமிழ் ஆங்கில அகராதி ரெட்டி என்னும் தெலுங்கு பழங்குடியினர் என்றும், கழகத் தமிழ், அகராதி ‘ரட்டி’ என்றும் குலம் என்றும் ‘ரட்டு’ என்பது ஒரு ஜாதி என்றும் கூறுகிறது.

ரெட்டிகளை குறிக்கும் ‘காபு’ என்ற தெலுங்கு சொல்லிற்கு மண்னுயிர் காக்கும் காவலர்கள், உழவர்கள், மன்னர்கள் என்று பொருள் கூறுகிறது. தலைவன், தளபதி, நாட்டாண்மை எனவும் பொருள் உண்டு. ரெட்டி என்ற சொல் பல நூற்றாண்டு கால வளர்ச்சி, மாற்றத்திற்கு பின் ரெட்டியார்கள் என மாறி உள்ளது. ஆறு, ஏழாம் நூற்றாண்டுகளில் பலவகை ரெட்டிகள் உள்ளதாக தெலுங்கு கல்வெட்டுகளில் காணப்படுகிறது.

முஸ்லீம்களுக்கு எதிராக நடந்த விடுதலைப் போராட்டத்தில் தளபதியாக விளங்கியவர்கள் வென்று 123 ஆண்டுகள் அதாவது கி.பி.1325 முதல் 1448 வரை ரெட்டியார்கள் தங்கள் ஆட்சியை நிலை நிறத்திக் கொண்டுள்ளனர்.

தமிழ்நாட்டு ஆறு ரெட்டி மன்னர்கள்:

  • ஸ்ரீ விராஜ சக்கரவர்த்தி
  • கோவிந்தராயர்
  • கிருஷ்ணராயர்
  • கலவல்லராயர்
  • சதுர்ப்புய கண்ணரதேவ சக்கரவர்த்தி
  • திருவிக்கிர தேவ சக்கரவர்த்தி

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் ரெட்டிகள் குடியிருந்தாலும் திருச்சி மாவட்டத்தில் குறிப்பாக துறையூர் பகுதியில் உள்ள சுற்றுவட்டார கிராமங்களிலும், பெரம்பலூர், கரூர், அரியலூர் மாவட்ட பகுதிகளிலும் நம் இன மக்கள் அதிகமாக கவுரமாக வாழ்ந்து வருகின்றனர். பெரும்பாலனவர் விவசாயமே முக்கிய தொழிலாகக் கொண்டு உணவு உற்பத்தியில் சிறந்து விளங்கினர்.

காலப்போக்கில் தொழிலில் ஆர்வம் கொண்டு நகர் பகுதியில் குடியேறினர். அந்த வகையில் திருச்சி கொள்ளிடக் கரையின் அருகில் அமைந்துள்ள நெ.1 டோல்கேட் பகுதியில் சுமார் 500 குடும்பங்கள் வரை குழந்தைகள் படிப்பிற்காகவும், தொழில் நோக்கம் கொண்டு வசித்து வருகின்றனர்.

நெ.1 டோல்கேட் ரெட்டி நலச்சங்கம்

இங்கு அனைவரும் ஒன்றுகூடி பல நன்மைகள் செய்யும் நோக்கில் 20.04.1997ல் ரெட்டி நலச்சங்கம் துவக்கப்பட்டுள்ளது.

சொந்த கட்டிடம்

பல பெரியோர்களால் துவக்கப்பட்ட இச்சங்கம் சிறு சேமிப்புகள் மற்றும் நன்கொடைகள் பெற்று ஒவ்வொரு வருடமும் குடும்ப விழா நடத்தப்பட்டுள்ளது. அவ்விழாக்களில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற குழந்தைகளுக்கு பாராட்டும், பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர். மேலும் பள்ளிக் குழந்தைகள், பெண்கள் மற்றும் அனைவரையும் ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக 2008ம் ஆண்டு சொந்தக் கட்டிடம் கட்ட திட்டமிட்டு பல சான்றோர்களிடம் நன்கொடைகள் பெற்று மூன்று மாடிக்கட்டிடமாக தற்போது செயல்பட்டு வருகிறது. இதனை, முசுவு மற்றும் மு.N.நேரு ஆகியவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

2023-ல் நடைபெற்ற குடும்ப விழாவில் 25 ஆண்டு வெள்ளிவிழாவாகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இச்சங்கத்தை பல தலைவர்கள் குறிப்பாக திரு.தியாகராஜன், திரு.ராமராஜ், திரு.சிவராமன், திரு.ஊ.ரெங்கராஜ் ஆகியோரும் செயலாளாராக திருமதி.கீதா, திரு.ராம்மோகன் அவர்களும், பொருளாளராக 1. திரு.ஞானசேகர், 2. திரு.பிரபாகரன், 3. திரு.அன்பழகன், 4. சு.இளங்கோவன் அவர்களும் நிறுவனத் தலைவராக திரு.துரைசாமி ரெட்டியாரும் இன்னும் பல சான்றோர்கள் பகுதி பொறுப்பாளர்களாகவும் இருந்து அரும்பாடுபட்டு சங்கத்தை வளர்த்துள்ளனர். அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளளோம்.

2022 முதல் புதிய நிர்வாகம்
  • திரு.சு.மதிவாணன் தலைமையில்,
  • திரு.னு.மணிவண்ணன் - செயலாளர்,
  • திரு.மு.ரெங்கராஜ் - துணைத் தலைவர்
  • திரு.ஏ.ராமராஜ் - துணைத் தலைவர்
  • திருமதி.சு.செல்வி - துணைத் தலைவர்
  • திரு.சு.இளங்கோவன் - பொருளாளர்
  • திரு.ளு.கனகராஜ் - இணைச்செயலாளர்
  • திரு.டீ.அசோகன் - இணைச்செயலாளர்
  • திருமதி.P.ரம்யா - இணைச்செயலாளர்

நிர்வாகிகளுடன் 27 பகுதி பொறுப்பாளர்களைக் கொண்டு “கரோனா”விற்கு பிறகு சங்கம் துடிப்போடு செயல்பட்டு வருகிறது.

பாத்திரங்கள் கொள்முதல்

சென்ற ஆண்டு கணிசமான நன்கொடைகள் பெற்று சிறு விசேங்களுக்குத் தேவையான பாத்திரங்கள் நாற்காலிகள், மேஜைகள் வாங்கி அதற்கென ஒரு தனியறை கட்டி பாதுகாப்பாக வைத்து பலரும் உபயோகிக்க குறைந்த வாடகையில் வழங்கப்பட்டு வருகிறது.